சென்னை: பொறியியல் கலந்தாய்வை 10 இடங்களில் நடத்தலாமா என்பது குறித்து அரசு பரிசீலினை செய்து வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் நிதிஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த தொடர் மே 10ஆம் தேதி வரை 22நாள்கள் நடைபெறவுள்ளன. இதுவரை பல்வேறு துறை சார்பிலான மானிய கோரிக்கை விவாங்கள் நடை பெற்று வருகின்றன. இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் – காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைப்பெறுகிறது.
இன்று காலை கேள்வி – பதில் நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது பொறியியல் கலந்தாய்வு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக் கழகத்தின் பொறியியல் கலந்தாய்வை சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் நடத்தலாமா என்பது குறித்து அரசு பரிசீலினை செய்து வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசியவர், ஆன்லைன் கலந்தாய்வில் குளறுபடி நடைபெற்றதால் நேரடி கலந்தாய்வு நடத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், ஆன் லைனில் நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வில் நிலவும் குளறுபடிகளை களைந்து, வரும் ஆண்டுகளில் கலந்தாய்வை நல்ல முறையில் நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.