சென்னை; தமிழ்நாட்டில் கடந்த ஒரு ஆண்டில் குற்றங்கள் குறைந்துள்ளது என்று கூறியுள்ள தமிழக டிஜிபி சைலேந்திர பாபு 90 இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பி ஆக பதவி உயர்வு அளித்தள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு லாக்கப் மரணங்கள் ஏற்பட்டு உள்ளது. மேலும் பல இடங்களில் காவல்துறையினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இது தமிழக சட்டசபையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், சென்னை, புரசைவாக்கத்தில் திருடுபோன பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு பேசினார். காவல் உதவி செயலியை பொதுமக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என காவலர்களுக்கு டிஜிபி அறிவுறுத்தினார். பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என எடுத்துரைத்தார். மேலும் கடந்த ஒரு ஆண்டில் குற்றங்கள் குறைந்துள்ளது என கூறினார்.
இதைத்தொடர்ந்து 90 இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பி பதவி உயர்வு வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.