தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 37 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

சென்னையில் 23, செங்கல்பட்டில் 6, காஞ்சிபுரத்தில் 3, திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

 

சென்னை செங்கை காஞ்சிபுரம் திருவள்ளூர் தவிர ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

 

இன்று மொத்தம் 15,811 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 24 ஆண்கள் 13 பெண்கள் என மொத்தம் 37 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 6,50,55,201 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். எனும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மொத்தம் 34,54,095 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் 34,15,603 பேர் குணமடைந்துள்ளனர். 38,025 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று 58 பேர் குணமடைந்த நிலையில் 467 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.