சென்னை:  சென்னையில் இயக்கப்படும்  மாநகர பேருந்துகள் வரும் நேரம், பயண விவரம் குறித்து அறிந்துகொளும் வகையில்  “சென்னை பஸ்’ (‘Chennai bus’ ) என்ற பெயரில் புதிய மொபைல் செயலி (Mobile App) உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த  செயலியை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று  தலைமைச் செயலக அலுவலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயங்கும் இடத்தை பொதுமக்கள் அறிந்திட ஏதுவாக, ‘CHENNAI BUS’ செயலியை தொடங்கி வைத்தார்கள்.

நுண்ணறிவு போக்குவரத்து  மேலாண்மை அமைப்பில் (ITS) மேம்படுத்தப்பட்ட நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயங்கும் இடத்தை பொதுமக்கள் அறிந்திட ஏதுவாக, ‘CHENNAI BUS’ செயலியை (Apps), இன்று (04.05.2022), தலைமைச் செயலக அலுவலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, போக்குவரத்துத்துறை அமைச்சர்  எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வின் போது, போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் கோபால்,  மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்  அன்பு ஆபிரகாம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த ‘CHENNAI BUS’ செயலியானது, அனைத்து சென்னை மாநகர பேருந்துகளில் GPS கருவிகள் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பயன்படும்படி,  பேருந்துகள் வருகை நேரம், வந்து கொண்டிருக்கும் இடம் (Location) ஆகியவற்றை  கைபேசியில் தெரியும்படி, தானியங்கி வாகன இருப்பிடம் (Automatic Vehicle Location)  உருவாக்கப்பட்டுள்ளது. மாநகர் போக்கரத்துக் கழகத்தில் மொத்தமாக உள்ள 3,454 பேருந்துகளில் GPS கருவி பொருத்தப்பட்டுள்ளது.  இப்பேருந்துகளில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள அண்டை மாவட்டங்களுக்கு 602 வழித்தடங்களில், 6,026 பேருந்து நிறுத்தங்களில் நின்றும் செல்லும் வகையில், 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் நாள்தோறும் பயணம் செய்யக்கூடிய, ஏறத்தாழ 25 இலட்சம் பயணிகள் உட்பட, பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வருகைத் தரும் பயணிகளும் இச்செயலியினை பயண்படுத்திக் கொள்ளலாம். இச்செயலியை பயன்படுத்தி, மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் உரிய நேரத்தில் பயணம் செய்து, சென்னை புறநகர் இரயில் நிலையம், சென்னை மெட்ரோ இரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று தங்கள் பயணத்தினை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இச்செயலியின் மூலம், சென்னை நகரத்திற்கு புதிதாக வருகை தரும் மக்கள், தங்கள் இருப்பிடத்தின் அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம், அந்த நிறுத்ததிற்கு வந்து கொண்டிருக்கும் பேருந்துகளின் விவரம் ஆகியவற்றை உடனடியாக அறிந்து கொள்ளலாம். மேலும், தங்களது பயண திட்டத்தை முன்கூட்டியே வகுத்துக்கொள்ள ஏதுவாக இச்செயலி அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அவசர மற்றும் பாதுகாப்பு செய்தியை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உடனே  தெரிவித்திட, இச்செயலியில் உள்ள SOS என்ற பொத்தானை பயன்படுத்திக் கொள்ளலாம். “CHENNAI BUS”  செயலியை பயன்படுத்தும் முறை பின்வருமாறு:  Google Play Store App-க்கு செல்லவும்  “CHENNAI BUS” App-னை பதிவிரக்கம் செய்து தங்களது செல்லிடை பேசியில் நிறுவ வேண்டும். தங்களது செல்லிடை பேசியில் இருப்பிடத்தை (Location) on செய்ய வேண்டும்.  தங்களது செல்லிடை பேசியில் “CHENNAI BUS” Logo-வை Open  செய்ய வேண்டும்.

Opening Screen-ல் தங்களது இருப்பிடம் மற்றும் சுமார் ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்கும் பேருந்து நிறுத்தங்கள் அடங்கிய வரைபடம் தங்களது செயலியில் தெரியும்.  தாங்கள் எந்த பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல வேண்டுமோ அதனை Click  செல்ல வேண்டும்.  அவ்வாறு செய்யும் போது அந்த பேருந்து நிறுத்ததிற்கு வரக்கூடிய அனைத்துப் பேருந்துகளும், வரிசைப்படி, தட எண், பேருந்து பதிவு எண் மற்றும் கணிக்கப்பட்ட நேரம்  (நிமிடங்களில்) தங்களின் செல்லலிடை பேசியில் தெரியவரும்.  தாங்கள் செல்ல வேண்டிய தட எண்ணை தேர்வு செய்யும் போது, தாங்கள் நிற்கக்கூடிய பேருந்து நிறுத்தம் மற்றும் பேருந்து வரும் இடம்  ஆகியவை செல்லிடை பேசியில் வரைப்படத்துடன் தெரியவரும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.