மும்பை:
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் சாய் சுதர்சன் அதிகபட்சமாக 65 ரன்கள் அடித்தார். பஞ்சாப் அணி பந்து வீச்சாளர்களில் ரபாடா நான்கு விக்கெட்களை வீழ்த்தினர்.
144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, 16 ஓவர்களிலேயே இரண்டு விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் டெல்லி – ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.
Patrikai.com official YouTube Channel