மும்பை:
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கி லக்னோ அணி 8 விக்கெட் இழப்புக்கு, 153 ரன்களை எடுத்தது. அதனையடுத்து பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு, 133 ரன்களை மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
ஐபிஎல் தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் குஜராஜ்- பெங்களுரு அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் ராஜஸ்தான் – மும்பை அணிகளும் மோத உள்ளன.