சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 54 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 8.00 மணி அளவில் வெளியிட்டுள்ள கொரோனா அறிவிப்பில், கடந்த 24மணிநேரத்தில், 20,069 சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 6,61,49,589 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
இன்று புதிதாக மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,53,883 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனா மரணம் ஏதுமின்றி, இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38,025 ஆக தொடர்கிறது.
இன்று மேலும் 35 பேர் தொற்று பாதிப்பில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில்,, இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34,15,351 ஆக உள்ளது.
தற்போது மாநிலம் முழுவதும் 507 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
[youtube-feed feed=1]



