சென்னை: சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2021) நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் முதல்வர் ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் உள்ள சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போடடியிட்டு அமோக வெற்றி பெற்றார்.
இவரது வெற்றி எதிர்த்து, வாக்காளர் பிரேமலதா என்பவர் மற்றும் தேசிய மக்கள் கட்சி வேட்பாளரை எம்எல் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மனுவில், உதயநிதி வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்ததாக கூறி, அவரது வேட்புமனுவை ஏற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றுகோரியிருந்தார்.
இந்த மனுவை நிராகரிக்க கோரி உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு செய்திருந்தார். இந்த மனுக்களின் மீதான விசாரணை நடத்திய நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, இன்று வாக்காளர் பிரேமலதாவின் மனுவை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.