திருமலா:
திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் இன்றுமுதல் ஆன்லைனில் பெறலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்றுமுதல் ஆன்லைனில் பெறலாம் என்றும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.