மும்பை: 
ர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் படைத்துள்ளார்.


இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இலங்கை 262 ரன்களை எடுத்தது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்து 36 ஆவது ஓவரிலேயே வெற்றிப்பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ஷிகர் தவான் 86 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் ஒருநாள் போட்டிகளில் 6,000 ரன்களை அவர் கடந்தார். இதில் குறைந்த இன்னிங்ஸில் ஒருநாள் போட்டியில் 6000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 4-வது வீரர் ஆனார் ஷிகர் தவான்.

அதேபோல் ஒருநாள் சர்வதேச போட்டி கேப்டன்சி அறிமுகப் போட்டியில் அரைசதம் எடுத்த 6வது வீரர் ஆனார் ஷிகர் தவான். இவருக்கு முன்னால், அஜித் வடேகர், ரவிசாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அஜய் ஜடேஜா, எம்.எஸ். தோனி ஆகியோர் இதே சாதனையைப் புரிந்துள்ளனர்