புதுடெல்லி:
ரியானா மாநிலத் தலைவரை காங்கிரஸ் மேலிடம் ஒரு வாரத்தில் அறிவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவிருக்கும் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தி, கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் கட்சி மாற்றங்களைச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஹரியானா காங்கிரஸ் பொறுப்பாளர் விவேக் பன்சால் நேற்று கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் 10 ஜன்பத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், ஹரியானா மாநிலத் தலைவரை காங்கிரஸ் மேலிடம் ஒரு வாரத்தில் அறிவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.