சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 29 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று 53 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து சென்னை வந்தவர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து500 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 36 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மற்ற மாவட்டங்களில் 17 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025 ஆக தொடர்கிறது.
இன்று 29 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 165ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, தமிழகம் முழுவதும் 310 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று 18,214 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 6 கோடியே 48 லட்சத்து 59 ஆயிரத்து 605 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.