வாஷிங்டன்:
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரும் 28ம் தேதி உக்ரைன் செல்கிறார்.

இந்த பயணத்தின் போது ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியை சந்தித்து பேச உள்ளார்.

இதையடுத்து ரஷ்யாவில் அடுத்த வாரம் அதிபர் புதினை சந்தித்த பிறகு ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரைன் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஐ.நா.வின் இணை செய்தித் தொடர்பாளர் எரி கனேகோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் 26 ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் மாஸ்கோவில் ஜனாதிபதி புடினை சந்தித்து பேச உள்ளதாகவும், உக்ரைனில்அமைதியைக் கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அவர் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் நேற்று ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மற்றொரு அறிக்கையில் குட்டெரெஸ் அடுத்த வாரம் உக்ரைனுக்குப் பயணம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.