ராமேஸ்வரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கிருந்து பல இலங்கை தமிழர்கள் இந்தியா உள்பட பல நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். ஏற்கனவே 40க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ள நிலையில், நேற்று மேலும் 13 ஈழத்தமிழர்கள் 2 படகுகளில் தனுஷ்கோடி பகுதிக்கு வந்துள்ளனர்.

3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை, கடலோர காவல் குழுமம், கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமைக்கு கோத்தபய குடும்பமே காரணம் என்று கூறி, அங்க ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மக்கள்  வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கிருந்து பல தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வரத் தொடங்கி உள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதியிலிருந்து இலங்கையில் வாழ வழியின்றி அகதிகளாக தமிழகத்திற்கு ஈழத்தமிழர்கள் வரத்தொடங்கி உள்ளனர். ஏற்கனவே சுமார் 42 பேர் வந்துள்ள நலையில்,  நேற்று நள்ளிரவு 2 படகில் கைக்குழந்தையுடன் வந்த மூன்று குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர்  தனுஷ்கோடி வந்து  தஞ்சமடைந்தனர். ‘அவர்களை மீட்ட  கடலோர காவல் குழும போலீசார் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அவர்களை விசாரணைக்காக மண்டபம் கடலோர காவல் குழுமம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்பிறகு அவர்கள் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.