நியூயார்க்: ஒருவர் மட்டும் அமர்ந்து பயணிக்கும் டிரோன் சோதனையை அமெரிக்க நிறுவனம் வெற்றிகரமாக செய்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலியா உள்பட சில நாடுகளில் ஓலா ஏர் டிரோன் மூலம் பார்சைல் சேவையை மேற்கொண்டு வரும் நிலையில், பல நாடுகள் போர்க்களத்திலும் வெடிகுண்டுகளை வீச டிரோன்களை பயன்படுத்தி வரும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு சீனாவில் ஒருவர் பயணிக்கும் வகையிலான டிரோன் கண்டு பிடிக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பல நாடுகளில் டிரோன் சோதனைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
பிரபல போக்குவரத்து நிறுவனமான உபேர் நிறுவனம் (Uber) ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு பல நாடுகளிலும் நகரங்களிலும் வாடகை கார்கள், ஆட்டோக்களின் சேவைகளை வழங்கி வந்த நிலையில், பின்னர் உபேர் ஏர் (‘Uber Air’) என்ற சேவையை கடந்த 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. கடந்த 2019 இல், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் Uber இன் முதல் சர்வதேச ‘Uber Air’ பைலட் நகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது. வணிக ரீதியிலான பயன்பாட்டுக்காக டிரோன்களை உபயோகப்படுத்தம் வகையில், அமெரிக்காவின் டல்லாஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களுடன் ‘உபெர் ஏர்’ திட்டத்திற்கான பைலட் நகரங்களாக இணைக்கப்படும் என்றும், இது 2023 முதல் வணிகச் செயல்பாட்டைத் தொடங்குவதாகம் அறிவித்திருந்தது.
இந்தியாவிலும் ராணுவ பயன்பாட்டுக்கு டிரோன்கள் உபயேகப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும், டிரோன் இயக்க சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், சென்னை மாநகர காவல் துறையிலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், துப்பு துலேக்கவும் டிரோன் காவல் பிரிவு உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
நாளுக்கு நாள் டிரோன் சேவை அதிகரித்து வரும், நிலையில், அமெரிக்காவில், லிப்ட் ஏர்கிராப்ட் நிறுவனம் ஒருவர் மட்டும் அமர்ந்து பயணிக்க கூடிய டிரோனை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு ஆஸ்டினை தளமாகக் கொண்ட நிறுவனம், சாதாரண மக்கள் பயன்படுத்தும் வகையில், டிரோன்களை வடிவமைத்தது. குறுகிய பொழுதுபோக்கு விமானங்களை அனைவருக்கம் கிடைக்கச் செய்ய உத்தேசித்து, 18-ரோட்டார் கிராஃப்ட் ஹெக்ஸாவை தயாரித்து, அதை பறக்கவிட்டு சோதனை நடத்தயது. இது வெற்றி கரமான அமைந்த நிலையில், அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களை செய்து, அப்டேட்களையும் கொடுத்து வந்தது. பின்னர், ராட்சத டிரோனில் ஒருவர் பறக்கும் வகையில் உருவாக்கியது. 432 பவுண்டுகள் மற்றும் ஒரு பயணியுடன் 10-15 நிமிடங்கள் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்தே ஒருவர் அமர்ந்து செல்லக் கூடிய ஹெக்சா என்ற பெயரில் டிரோனை உருவாக்கியுள்ளது.
இந்த டிரோனில், ஆண்டர்சன் கூப்பர் என்ற பத்திரிகையாளர் தனியாக 6 நிமிட நேரம் வெற்றிகரமாக பறந்து சாதனை படைத்துள்ளார். முன்னதாக அவர் டிரோனில் பறப்பதற்காக சிமுலேட்டர் முறையில் அரை மணி நேரம் மட்டுமே பயிற்சி எடுத்ததாக தெரிவித்தவர், மனிதர்கள் நின்ற இடத்திலிருந்து எழும்பி குறிப்பிட்ட இடத்தில் துல்லியமாக இறங்கும் வகையில் பயன்படுத்த முடியும் என்றும், தரையில் இருந்தவாறே இந்த ட்ரோன்களை இயக்க முடியும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் தொழில்நுட்பத்தில் ட்ரோன்கள் பல்வேறு துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் மனிதர்கள் போக்குவரத்திலும் அவற்றை ஈடுபடுத்தும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது இன்றைய இயந்திரதனமான வாழ்க்கைக்கு தகுந்தவாறு, வானூர்தி போல டிரோன்கள் மூலம் பறக்கும் காலம் விரைவில் நிகழும் என்பதை றக்க முடியாது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசல் காரணமாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், எதிர்காலத்தில் இது போன்ற மனிதர்களை ஏற்றி செல்லும் டிரோளின் ஆக்கிரமிப்பு அதிகரிக்கும் என்றும் இது மக்களிடையே பெரும் வரவேற்பு பெறும் என்றும் நம்பப்படுகிறது.