மும்பை: 
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை என்று நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சென்னை அணி வீரர் தீபக் சஹார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை என்றும், மீண்டும் முழு பலத்துடன் விளையாட களமிறங்குவேன். தொடர்ந்து ஆதரவு அளித்த சென்னை அணி ரசிகர்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.