மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் என்று பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக நடைபெற்றது.
12நாட்கள் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 5ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவுல் இன்று முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. மதுரை மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.
நாளை ஏப்ரல் 15ந்தேதி வெள்ளிக்கிழமை – திருத் தேரோட்டமும் (ரத உட்சவம்), ஏப்ரல் 16ந்தேதி 2022– சனிக்கிழமை – தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் காலை 5.50 முதல் 6.20 மணிக்குள் வைகையில் எழுந்தருள்கிறார். அன்று இரவு தீர்த்தவாரியுடன் நிறைவுபெறுகிறது.