சென்னை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற வியாழக்கிழமை (ஏப்ரல் 14) அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக  சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

‘வருகின்ற 14.04.2022 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25 II(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள். FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் FL11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும்  அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது,

தவறினால். மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.