டெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் ஒரு டோஸ் ரூ.225 என குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 10ந்தேதி முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் பணம் செலுத்தி எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதையடுத்து, அதற்கான விலை குறைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. அப்போது ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை குறைந்த பட்சம் ரூ.600 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால் பல தனியார் மருத்துவ மனைகள் ரூ.1000 வரை வசூலித்தன.

இந்த நிலையில், மத்தியஅரசின் அறிவுறுத்தலின் பேரில், தற்போது தடுப்பூசி டோஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைக்கான கொரோனா தடுப்பூசியின் விலையை சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் ரூ.225 என குடிறத்து அறிவித்துள்ளன. அதன்படி,  கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸுன் விலையை ரூ. 600லிருந்து ரூ. 225ஆக குறைத்தது சீரம் அறிவித்து உள்ளது. மத்திய அரசு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனமும்,இ  கோவாக்சின் தடுப்பூசியின் விலையை ரூ. 1,200லிருந்து  ரூ. 225ஆக குறைத்தது அறிவித்து உள்ளது.