டெல்லி: இந்தியாவில் ஒரேநாளில் 1,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1,033 நேற்று 1,109ஆக இருந்த பாதிப்பு இன்று 1,150ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,365 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8 மணி அளவில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்திலான கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.  அதில் கடந்த 24 மணி நேரத்தல்  புதிதாக 1,150 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,30,34,217ஆக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 11365 ஆக உள்ளது.

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 83 போ் கொரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,21,656 ஆக உயா்ந்துள்ளது.

நேற்று மட்டும்  1,194 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,25,01,196 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 14,79,544 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 185.55 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ‘

நேற்று ஒரேநாளில் 4,66,362 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 79.34 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.