சென்னை:
தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு, டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.