ஈரோடு:
ரோட்டில் காவல்துறையினரை வடமாநில இளைஞர்கள் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளியில் தனியார் ஆயில் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காமத்ராம் என்பவர், நேற்று இரவு லோடு ஏற்றிக் கொண்டிருக்கும்போது லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உயிரிழப்புக்கு 12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இழப்பீடு கேட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஆலை நிர்வாகத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் மொடக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் தீபா உட்பட 8-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனிடையே போலீசார் மீது தொழிலாளர்கள் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளாது.