கொழும்பு:
டும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாளை காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது.

கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால், அதிபர், பிரதமருக்கு எதிராக இலங்கை முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. பொருளாதார பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பத் திட்டமிட்டுள்ளன.

இலங்கை அரசிலிருந்து விலகுவதென இலங்கை சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளையில், லசந்த அலகியவன்ன, துமிந்த திஸாநாயக்க, பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் இணை அமைச்சர் பதவிகளிலிருந்து விலகுவது என்று முடிவு செய்திருப்பதாகவும் சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. கேபினட் அமைச்சர்கள் அனைவரும் ஏற்கனவே பதவி விலகிவிட்ட நிலையில், இணை அமைச்சர்கள் மூன்று பேர் தற்போது ராஜினாமா செய்திருக்கின்றனர்.