சென்னை:
தமிழக பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வருகிற 7-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகிறது. இதனால் 5,6-ந் தேதிகளில் அந்தமான், நிக்கோபர் தீவுகளில் கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel