மதுரை:
மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு தரிசன கட்டணம் கட்டாய வசூலால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இரண்டு 2 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த திருக்கல்யாணத்தின்
கட்டண தரிசனத்திற்கு ஹிந்து அறநிலையத்துறை முக்கியத்துவம் கொடுத்துள்ளதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வீரவசந்தராயர் மண்டப தீ விபத்து மறுசீரமைப்பிற்காக கிழக்கு கோபுர வாசல் வழியாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு வாசல்களின் நுழையும் இடத்திலேயே கட்டாய தரிசன கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel