டெல்லி: இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அவரது இந்திய பயணம் ஒத்தி வைக்கப் படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் இன்னும் தொற்று பரவல் நீடித்து வருகிறது. இதற்கிடையே உலக நாடுகளுக்கு இடையே போக்குவரத்து உள்பட அனைத்துவிதமான பரிவர்த்தனை களும் மீண்டும் தொடங்கி உள்ளன.

இந்த நிலையில், இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வர இருந்தார்  இஸ்ரேல் பிரதமர் பென்னட். அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற பின் நப்தலி பென்னெட் முதன்முறையாக, வரும் 3-ம் தேதி முதல் 5ந்தேதி வரை இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்திட திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், பென்னெட்டின் இந்திய பயணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது இந்திய வருகை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் பரவியுள்ள கொரோனா தொற்றால், பிரதமர், நப்தாலி பென்னட்டுக்கு  பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து நப்தாலி பென்னட் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அவரது அனைத்து வெளி நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும்,  அவர், வீட்டிலிருந்தவாறே அலுவலக பணிகளை செய்து வருவதாக, தெரிவித்துள்ளது.