சென்னை: நாடு முழுவதும் மத்திய மோடி அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் 2 நாள் (மார்ச் 28, 29) வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் எச்சரிக்கையை மீறி சென்னையில் போக்குவரத்து துறையினர் ஸ்டிரைக்கில் கலந்துகொண்டுள்ளனர். இதனால், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கடுமையான துரயத்துக்கு ஆளாகி உள்ளனர். மேலும் வேலைக்கு செல்லும் பொதுமக்களும், பேருந்து இயக்கப்படாததால் கடுமையான மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இலவச பேருந்தை நம்பி வந்த சாமானிய மக்கள், பெண் சிறுவியாபாரிகள் காலையில் பேருந்துகள் இயங்காததால், கடுமையான பாதிப்பு உள்ளாகினர்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் தனியார் மயம், பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, எரிபொருட்கள் விலை உயர்வு உள்பட பல்வேறு நவடடிக்கைகளை எதிர்த்து அகில இந்திய நாடு தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் அரசுத்துறை  தனியார் துறை ம சிஐடியூ,ஏஐடியூசி,யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த போராட்டத்துக்கு திமுக தலைமை ஆதரவு தெரிவித்து உள்ளது. ஆனால், திமுக அரசான தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதற்கிடையில், தமிழக போக்குவரத்து துறை, வங்கி உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் அகில இந்தியவேலை நிறுத்தத்தில் கலந்துகொள்வதாக அறிவித்தன.

ஆனால், தமிழக அரசோ, பொது வேலைநிறுத்ததில் கலந்துகொண்டால், கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படும், சம்பளம் கட் செய்யப்படும் என போக்குவரத்து துறை, மின்துறை மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பும் மிரட்டல்கள் விடுத்திருந்தனர். ஆனால், அதை சட்டைசெய்யாது தொழிற்சங்கத்தில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழக அரசின் எச்சரிக்கையையும் மீறி, இன்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் பல இடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. சென்னையின் ஒரு சில பகுதிகளில் மட்டும் ஓரிஙைணடு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், வட சென்னையில் எந்தவொரு பேருந்தும் டிப்போவில் இருந்து வெளியே எடுக்கப்படவில்லை.

இதனால், பள்ளி,கல்லூரிகள் மற்றும் வேலைக்கு சென்ற பொதுமக்கள், மாணவ மாணவிகள், பேருந்துகள் இல்லாமல் பெரும் அவதிப்பட்டனர். அருகே உள்ள ரயில் நிலையங்களுக்கு ஷேர் ஆட்டோ பிடித்தும், நடந்தும் சென்றனர். பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பொது வேலைநிறுத்தத்தையொட்டி, வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை பகுதி என தனித்தனியாக தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து உள்ளனர். வடசென்னை பகுதியில் 9 இடங்களில் போராட்டம் நடைபெறும் என்றும்,  தபால் நிலையங்கள் முன்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், தென் சென்னையில் ஒரு இடத்திலும், மத்திய  சென்னையை பொறுத்தவரையில் அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். உட்பட்ட பகுதியில் ஓரிடத்திலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.  தென்சென்னையில் கிண்டி பேருந்து நிலையம் அருகே தபால் நிலையம் முன்பாக போராட்டம் நடைபெற உள்ளது. அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த போராட்டத்தில் ரயில்வே ஊழியர்களும் இணைந்துள்ளதால், ரயில் போக்குவரத்தும் முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. குறைந்த அளவிலான ரயில்களே இயங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறத.

தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.