நியூயார்க்

மெரிக்க விமானப் படையில் பணி புரியும் இந்து மதத்தைச் சேர்ந்தவருக்கு பணியில் இருக்கும் போது பொட்டு வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்ஷன் ஷா என்பவர் இந்து மதத்தைப் பின்பற்றி வருகிறார். இவர் அமெரிக்க விமானப்படையில் பணி புரிந்து வருகிறர். கடந்த ஜூன் 2020 இல் அடிப்படை இராணுவப் பயிற்சியில் கலந்து கொள்ளத் தொடங்கியதிலிருந்து, தனது சீருடையின் ஒரு பகுதியாகத் திலகம் அணிவதற்கு அனுமதி கோரினார்.

அவருக்குக் கடந்த பிப்ரவரி 22 அன்று அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது தர்ஷன் ஷா வயோமிங்கில் உள்ள பிரான்சிஸ் இ வாரன் விமானப்படைத் தளத்தில் விண்வெளி மருத்துவ தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிகிறார், மேலும் அவர் அமெரிக்க விமானப்படையின் 90வது செயல்பாட்டு மருத்துவ தயார்நிலைப் படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தர்ஷன் ஷா, ”தினமும் தற்போது பொட்டு வைத்துக் கொண்டு பணியைச் செய்வது மகிழ்ச்சியை அளித்துள்ளது. என்னுடன் பணி புரிபவர்கள் எனக்குக் கைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். , இந்த மத சின்னத்துக்கு நான் அனுமதி பெற எவ்வளவு கடினமாக முயன்றேன் என்பது அவர்களுக்குத் தெரியும்.” எனத் தெரிவித்துள்ளார்.