டில்லி

ர்செல் – மாக்சிஸ் வழக்கில் ஏற்கனவே முன் ஜாமீன் பெற்றுள்ள ப சிதம்பர்ம மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு டில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது

ஏர்செல் – மாக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் ரூ.600 கோடி வெளிநாட்டு முதலீடுகள் பெற உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  மேலும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது ஆலோசனை நிறுவனம் மூலம் இந்த முதலீடுகளைப் பெற மறைமுகமாக உதவியதாகவும் இதற்காக அவர் ரூ.26 கோடி ஆலோசனைக் கட்டணம் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் அவர் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ஏற்கனவே முன் ஜாமீன் பெற்றுள்ளனர்.    மேலும் வழக்கமான ஜாமீன் கோரி இருவரும் டில்லி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.  இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

சிபிஐ பதிவு செய்துள்ள ஏர்செல் –மாக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதமபரம் மற்றும் அவர் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவருக்கும் டில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.   இந்த வழக்கி நிலை குறித்த அறிக்கையை அளிக்க வேண்டும் என சிபிஐக்கு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.