ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான மரக்குடோன் மற்றும் பழைய மரச்சாமான்கள், மரக் குப்பைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி, அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த 11 தொழிலாளர்கள் உடல்கருpக உயிரிழந்துள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத் அருகே உள்ள போய்குடாவில் உள்ள மரம் சார்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோன் உள்ளது. இங்கு பழைய மரச்சாமான்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த குடோனில் இன்றுஅதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் அங்குதங்கியிருந்த 12 பேரில் 11 பேர் உயிரிழந்தனர். ஒருவர் உயிர் பிழைத்தார். உயிரிந்தவர்கள் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது தீ பரவியதால், அவர்கள் வெளியேற முடியாத நிலையில் தீயில் சிக்கி இறந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீ விபத்துக்கு ஷாக் சர்க்யூட் காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.