சென்னை:
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் வங்கி கடன் மேளா நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக நம் தமிழக அரசு மக்களுக்கு பயன்படும் வகையிலான பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துக் கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக மகளிருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவத்தை அளித்து தமிழக அரசு திட்டங்களை அறிவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டம் ஒன்று நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கி கடன் மேளா நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel