டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,614 பேருக்கு கொரோனா பாதிப்பு, 89 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பரவல் வெகுவாக குறைந்து விட்டாலும், கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தொடர்ந்து வருகிறது. கொரோனா உயிரிழப்பு 100க்கீழே குறைந்துள்ளது மருத்துவ நிபுணர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கொரோனா நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதனப்டி, கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 3,614 பேர் காரோனா தொற்றால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,87,875ஆக உயர்ந்திருக்கிறது.

நேற்று ஒரே நாளில் மேலும்  89 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன் மூலம்,  நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,15,803 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும்,  தொற்றில் இருந்து 5,185 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம்  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,24,31,513 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர்  98.71% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும கொரோனா தொற்று காரணமாக 40,559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.09% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் 1,79,91,57,486 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 18,18,511 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 77,77,58,414* மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 8,21,122 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.