சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு 3 நாள் மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது. இன்று முதல் மார்ச் 12 வரை இந்த மாநாடு நடைபெறுகிறது.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருநதது. அதன்படி மாநாடு இன்றுமுதல் 3 நாட்கள் நடைபெறுகிறது.
மு.கஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல், அறிவிக்கப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்து, அறிந்துக் கொள்ளவும், அவற்றை மேலும் சிறப்பாக செயல்படுத்தவும், ல் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் செயல்பாடு மற்றும் அவற்றை விரைந்து செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இன்று முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதுடன், முதல் முறையாக வனத்துறை அலுவலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
3 நாள் நடைபெறும் மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்ட – ஒழுங்கு, வளர்ச்சி பணிகள் குறித்தும், வரும் ஆண்டுகளில் மக்களின் தேவைகளை ஆட்சியர்கள் மூலம் அறிந்து திட்டங்களை கொண்டுவர ஆலோசனை நடைபெற உள்ளது.