புதுச்சேரி
புதுச்சேரி அருகே நடந்த கார் விபத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மகன் ராகேஷ் உயிர் இழந்தார்.

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளவர் என் ஆர் இளங்கோ.
இவரது மகன் ராகேஷ் ஆவார்
புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கோட்ட குப்பம் உள்ளது.
இங்கு கிழக்கு கடற்கரைச் சாலையில் ராகேஷ் காரில் சென்ற போது கார் விபத்தில் சிக்கியது
இந்த விபத்தில் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராகேஷ் உடன் வந்த மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்
Patrikai.com official YouTube Channel