மகாவிஷ்ணுவின் அம்சமான துளசி மற்றும் சந்தன மரம்

துளசிச் செடி மற்றும் சந்தன மரம் மகாவிஷ்ணுவின் அம்சங்களாகும்.   இவை குறித்துக் காண்போம்

துளசி

துளசி மகாவிஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக மகாவிஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசிக்குப் பல மருத்துவ குணங்களும் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களைக் குணமாக்கும்.

சந்தன மரம்

சந்தனமரம் மகாவிஷ்ணுவின் மற்றொரு அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிப்படுகின்றன. இவ்வதிர்வுகள் மன அமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.