மெல்போர்ன்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் நிக் ஹாகலே இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2007 வருடம் இந்தியாவில் கடைசியாக இந்திய பாகிஸ்தான் அணிகளுக்குக்கிடையே கிரிக்கெட் போட்டி நடந்தது. பாகிஸ்தான் அணி அப்போது இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்தது. அதன் பிறகு அரசியல் சூழலால் இரு நாடுகளுக்கிடையே உலகக் கோப்பை போட்டிகள் தவிர வேறெந்த போட்டியும் நடக்கவில்லை.
இருப்பினும் கடந்த 2016 ஆம் வருடம் இந்தியாவில் நடந்த டி 20 உல்கக் கோப்பைக்கு இந்தியாவுக்கு மீண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வந்து விளையாடியது. ஆனால் அதன் பிறகு மீண்டும் எல்லையில் நிலவும் பத|ற்றம் காரணமாக எந்த ஒரு போட்டித் தொடரும் திட்டமிடப்படாமல் உள்ளது. அண்மையில் துயாயில் நடந்து முடிந்த 5 20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் மோதிய இந்தியா தோல்வி அடைந்தது.
தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் நிக் ஹாக்லே,
”ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெறும் முத்தரப்பு போட்டிகள் எனக்கு மிகவும் விருப்பமானதாகும். இந்த போட்டி கடந்த காலங்களில் சிறப்பாக இருந்தது. மீண்டும் அது போலப் போட்டிகள் நடத்த நாங்கள் விரும்புகிறோம்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். ஆகவே இந்த இரு நாடுகளுக்கு இடையே ஆன கிரிக்கெட் போட்டியை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். உலக கிரிக்கெட் ரசிகர்கள் பார்க்க விரும்பும் போட்டிகளில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளும் ஒன்றாகும்.”
எனத் தெரிவித்துள்ளார்.