நியூயார்க்: உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் உள்பட பிற வெளிநாட்டினரை வெளியேற்றும் வகையில், போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதையடுத்து,  GMT (கிரீன்விச் சராசரி நேர மண்டலம்) 06:00 மணி முதல் உக்ரைனில் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்யா அறிவித்ததுள்ளது என்று ரஷ்யாவின் ஊடகமான ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.  

உக்ரைன் மீது இன்று 10வது நாளாக ரஷ்யா தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கீவ் நகரை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா கடுமையான தாக்குதல்களை தொடர்கிறது. இதனால் அங்கு சிக்கியுள்ள ஏராளமான இந்திய மாணவர்கள் உள்பட வெளிநாட்டில், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை வெளியேற்றும் முயற்சியில் இந்தியா உள்பட உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் எல்லையை விட்டு இதுவரை 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறியுள்ளனர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஐ.நா சபையும் உக்ரைனில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்கள் வெளியே ரஷ்யா போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது.

இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அபபோது, உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் உள்பட வெளிநாட்டினரை வெளியேற்ற ரஷ்யா தயாராக இருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்ய தூதர் உறுதி அளித்தார்.

அதைத்தொடர்ந்து, தற்போது உக்ரைனில் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்யா அறிவித்து இருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. மனிதாபிமான முறையில் பொதுமக்கள் வெளியேற உதவும் வகையில் இந்த போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதாகவும்,  கிரீன்விச் நேரப்படி 6மணி முதல் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, போரில் காயமடைந்தவர்களும், இன்னும் பிற மருத்துவ தேவைகளுக்காக சிகிச்சை பெற ஏதுவாகவும், மற்றும் மீட்பு பணிகளுக்காக போரை தற்காலிகமாக நிறுத்த ரஷ்ய படைகளுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் நேரப்படி காலை 8 மணி முதல், தற்காலிகமாக போர் நிறுத்தம்  செய்யப்படும் என்றும், இந்திய மருத்துவ மாணவர்கள் உட்பட வெளிநாட்டினரை  மீட்க உதவிகள் செய்யப்படும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா உறுதி தெரிவித்துள்ளது.

உக்ரைனில் இருந்து வெளியேறும் வெளிநாட்டினர்,  கிழக்கு உக்ரைனில் உள்ள வோனோவாக்கா நகரம் வழியாக வெளியேற நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும்,  மனிதநேய அடிப்படையில், வோனோவாக்கா நகரம் வழியாக மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கவும் ரஷ்யா உறுதி கூறியுள்ளது.

கிரீன்விச் இடைநிலை நேரம் (Greenwich Mean Time-GMT) லண்டன், கிரீன்விச்சில் உள்ள ராயல் வானிலை ஆய்வுக்கூடத்தில் உள்ள இடைநிலை சூரிய நேரத்தைக் குறிப்பது. இது கால மண்டலமாக பார்க்கப்படும்போது ஒருங்கிணைக்கப்பட்ட உலகளாவிய நேரத்தை (UTC) குறிப்பிடுவதற்கென்று பொதுவாக பயன்படுத்தப்படுகிறது,