உக்ரைன் தலைநகர் கிவ்-வில் இறுதி கட்ட போர் நடந்து வருவதாகவும் இன்று இரவுக்குள் அதன் தலைவிதி தெரிந்துவிடும் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
24ம் தேதி உக்ரைன் மீது போர் பிரகடனம் செய்தார் ரஷ்ய அதிபர் புடின் இவரது அறிவிப்பு வெளியான ஒரு சில நிமிடங்களில் உக்ரைன் மீது தாக்குதலை துவங்கிய ரஷ்ய ராணுவம் உக்ரைனில் உள்ள 216 ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி முற்றிலும் அழித்ததாக கூறப்படுகிறது.
தாக்குதல் துவங்கிய நிமிடம் முதல் ரஷ்ய படையின் ஆக்ரோஷத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய உக்ரைன் செர்னோபில் அணு உலையை ரஷ்யா-விடம் இழந்தது.
18 முதல் 60 வயது ஆண்கள் அனைவரும் நாட்டைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த உக்ரைன் அதிபர்
ஜெலன்ஸ்கி சுமார் 18,000 துப்பாகிகளை வீதியில் கொண்டு வந்து இறக்கி பொதுமக்களை போராடத்தில் இறக்கினார்.
கிவ் நகரை நோக்கி முன்னேறிய நிலையில் ஜெலன்ஸ்கி-யின் இந்த செயல் ரஷ்ய ராணுவத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது, இதனால் நேற்று தாக்குதல் சற்று குறைந்தது.
பொதுமக்களை கேடயமாக பயன்படுத்திய உக்ரைன் அதிபரின் செயலால் அதிர்ச்சி அடைந்த ரஷ்யா, “ஆயுதங்களைக் கீழே போட்டால் பேச்சு வார்த்தைக்கு தயார்” என்று அறிவித்தது. மேலும், உக்ரைன் ராணுவ வீரர்கள் ஜெலன்ஸ்கியை தூக்கி ஏறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு லட்சத்திற்கும் அதிகமான உக்ரைனியர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினர் மேற்கு எல்லையை நோக்கி உக்ரைனை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில், இரவு முதல் மீண்டும் தாக்குதலை துவங்கிய ரஷ்ய படை எந்த நேரத்திலும் கிவ் நகரை கைப்பற்றிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட போர் நடைபெற்று வருவது குறித்து உக்ரைன் அதிபர் கூறியபோது, “உக்ரைனின் தலைவிதி இன்று தெரிந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.