சென்னை

மிழகத்தில் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு வரும் மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது.

தமிழக மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 128 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடந்து 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுள்ள்ன.  இந்த தேர்தல்களில் வெற்றி பெற்றோர்கள் பட்டியலும் வெளியாகி உள்ளன.

தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் வரும் மார்ச் 2 அன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.  இவர்களுக்கு அவரவர்க்கு தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புக்களின் செயல் அலுவலர் அல்லது ஆணையர் முன் பதவிப் பிரமாணம் நடைபெறும்.

பிறகு மார்ச் 4 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளன.  அதற்கான வேட்புமனுக்கள் அன்றைய தினம் பெறப்பட்டு போட்டி இருந்தால் அதே தினம் வாஅக்குபதிவு நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்படும்.

அதே நாள்ல் பிற்பகல் 2.30 மணிக்குத் துணை மேயர் மற்றும் துணைத் தலைவர்கள் போட்டிகளுக்கான மறைமுக தேர்தல் நடந்து அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.   மேற்படி தேர்தல் நேர்மையாகௌவ்ம் அமைதியாகவும் நடைபெற உங்களைத் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.