‘செர்வண்ட் ஆப் தி பீப்பிள்’ (Servant of The People) என்ற தொலைக்காட்சித் தொடரில் காமெடியனாக கலக்கி வந்தவர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி.
2018 மார்ச் மாதம் தனது தொலைகாட்சி தொடரான செர்வண்ட் ஆப் தி பீப்பிள் என்ற பெயரிலேயே தனி கட்சி துவங்கிய ஜெலன்ஸ்கி 2019 ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பெற்று அப்போது அதிபராக இருந்த பெட்ரோ போரோஷென்கோ-வை தோற்கடித்தார்.
ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்கள் அதிபரின் பொறுப்பை உணராமல் செயல்பட்டு வருவதாக ஜெலன்ஸ்கி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்புடன் நட்பு பாராட்டினார் ஜெலன்ஸ்கி தொடர்ந்து பைடனுடனும் நல்லுறவில் இருந்து வந்தார் ஜெலன்ஸ்கி.
முன்னாள் சோவியத் நாடான உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைக்கும் முயற்சியில் அமெரிக்காவுடன் கைகோர்த்த ஜெலன்ஸ்கி உலக அரங்கில் தனது பெயரை நிலைநாட்ட முயன்றார்.
உலக அரங்கில் வலிமை மிக்க தலைவராக தன்னை முன்னிலைப் படுத்த முயன்ற ஜெலன்ஸ்கியின் இந்த முடிவால் கொந்தளித்த ரஷ்யா உக்ரைன் மீது போர் பிரகடனம் செய்ததுடன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சிறைப்படுத்த திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.
மூன்றாண்டுகளுக்கு முன் நடிகராக வலம் வந்து கொண்டிருந்த ஜெலன்ஸ்கி தற்போது ரஷ்ய ஊடுருவல் படையினரிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள போராடிவரும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில் இவரை காப்பாற்ற நேட்டோ நாடுகள் மேற்கொள்ளப்போகும் முயற்சி குறித்து எந்த முடிவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டை விட்டு ஓடவில்லை… ரஷ்ய கூலிப்படை என்னை கொல்வதற்காக தேடுகின்றனர் – உக்ரைன் அதிபர்