சென்னை
தமிழகத்தில் இன்று 575 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,47,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இன்று தமிழகத்தில் 65,988 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 6,41,52,004 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 575 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை 34,47,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 37,997 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 1,913 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,00,144 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 9,440 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று சென்னையில் 144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 7,49,474 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்துள்ளார். இதுவரை 9,059 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்று 342 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,38,400 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 2,015 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 81 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 66 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
இன்று தென்காசி மாவட்டத்தில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.
மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,29,242 பேர் பாதிக்கப்பட்டு 2,613 பேர் உயிர் இழந்து 3,25,283 பேர் குணம் அடைந்து தற்போது 1,346 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,34,823 பேர் பாதிக்கப்பட்டு 2,656 பேர் உயிர் இழந்து 2,31,355 பேர் குணம் அடைந்து தற்போது 812 பேர் சிகிச்சையில் உள்ளனர்.