பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிஎப்ஐ அமைப்பினர் தலையீடு உள்ளதாகவும், அவர்களின் அச்சுறுத்தல் காரணமாகவே,  முஸ்லிம் மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் கல்லூரியில் போராட தொடங்கினர் என்று உடுப்பி கல்லூரி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணாக்கர்களிடையே ஏற்றத்தாழ்வு, சாதி மத வேறுபாடுகளை களையும் வகையில், சீருடை திட்டம் அமல் படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி ஹிஜாப் அணிந்த மாணவிகளை கல்வி நிறுவனங்கள் தடுத்ததால் சர்ச்சை எற்பட்டு வன்முறை வெடித்தது.

இந்த நிலையில, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கு தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட  அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணை யின்போது, உடுப்பி பி.யு.கல்லூரி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.எஸ்.நாகனந்த், ஹிஜாப் பிரச்சினை எழுந்துள்ள சம்பந்தப்பட்ட கல்லூரியில் 2004-ம் ஆண்டுமுதல் சீருடை விதிகள் கட்டாயமாக்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் வரை வகுப்பறைக்குள் எந்த மாணவியும் ஹிஜாப் அணிந்து வரவில்லை. கல்லூரி நிகழ்வுகளில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்றுள்ளனர்.

70-க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகள் படிக்கும் அந்த கல்லூரியில் 6 மாணவிகள் மட்டுஅட  ஹிஜாப் அணிந்துவர அனுமதி கேட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்த தால் பிரச்சினையை எழுப்பி உள்ளனர். இதன் பின்னணியில்  கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (சிஎப்ஐ) அமைப்பு உள்ளது. அவர்கள் இது தொடர்பாக அந்த அமைப்பிடம் ஆலோசித்த பிறகே,  கல்லூரி நிர்வாகத்திடம், ஆசி ரியர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கல்லூரி மேம்பாட்டு குழு, உடுப்பி ஆட்சியர், அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படாததால் கடந்த ஜனவரியில் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுது உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.  சிஎப்ஐ தலையிடுவதற்கு முன்பு எந்த போராட்டமும் நடக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிடனார்.

கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (சிஎப்ஐ) என்ற அமைப்பான இந்தியாவில் தடை செய்யப்பட்ட சிமி எனப்படும் இஸ்லாமிய மாணவர் அமைப்புடன் தொடர்புடையது. அதுபோல சிமியுடன் தொடர்புடைய மற்றொரு அமைப்பு பிஎஃஐ எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா.   (PFI and CFI are fronts of SIMI (Students’ Islamic Movement of India) Campus Front of India (CFI), Popular Front of India (PFI)

தீவிர கருத்துக்களைக் கொண்ட அந்த அமைப்பினர் பல இடங்களில் குழப்பங்களை ஏற்படுத்தி மாணவிகளையும் பெற்றோரையும் தூண்டி விட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

இதையதுத்து, கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, “இது புதிய தகவலாக இருக்கிறது. இந்த தகவலை அரசு ஏன் முன்கூட்டியே நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை என்று வினவியதுடன்,  இந்த அமைப்பு பற்றிய உளவுத் துறை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்” என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து ஆஜரான கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் நவத்கி, “இது உணர்வுப்பூர்வமாக அணுக வேண்டிய விஷயம். உளவுத்துறையின் அறிக்கையை சீல் இடப்பட்ட கவரில் விரைவில் தாக்கல் செய்கிறோம்” என்றார்.

அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை (இன்று) வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.