மும்பை

தாதா இப்ராகிம் தொடர்புடைய பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர மந்திரி நவாப் மாலிக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார்.  இவர் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாகப் புகார்கள் எழுந்தன.   இவரிடம் இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்யச் சம்மன் அனுப்பினர்.

இதையொட்டி இன்று காலை 6 மணி முதல் அமலாக்கத்துறையினர் நவாப் மாலிக் வீட்டுக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்  இன்று காலை 8.30 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அவரை அழைத்துச் சென்று விசாரணையைத் தொடர்ந்தனர்.   இந்த தகவலை அவரது அலுவலகம் உறுதி செய்தது.

இன்று காலை முதல் நவாப் மாலிக் உடன் நடந்த விசாரணை முடிவில் மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  பண மோசடி வழக்கில் கைதான அவருக்கு ஆதரவாகத் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசு மற்றும் அமலாக்கத்துறையினருக்கு எதிராக இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.