தஞ்சாவூர்: மாணவி லாவண்யா தற்கொலை மதமாற்றத்த வற்புறுத்தலால் நடைபெற்றதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான அதிமுகவை மைக்கேல்பட்டி அடங்கிய திருக்காட்டுபள்ளி பேரூராட்சி மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளனர்.
அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை தமிழக பாஜக தேசிய அளவில் எடுத்துச் சென்றது. இதுதொடர்பாக பல்வேறு வீடியோக்கள் வெளியானதால், மதக்கலவரம் ஏற்படும் சூழல் உருவானது. தற்போது இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், அந்த பகுதி மக்கள் தங்களது வாக்குகளை திமுகவுக்கும் சுயேச்சைகளுக்கும் வாக்களித்து, தங்களது அதிருப்தியை முழுமையாக காட்டியுள்ளனர். மைக்கேல்பட்டி அமைந்துள்ள திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியை திமுக முழுமையாக கைப்பற்றியுள்ளது.
திருகாட்டுப்பள்ளி பேரூராட்சிக்கு மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. அதில் 11 வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளது. அதிமுக, பாஜக ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் அமமுக 2 வார்டுகளையும் சுயேச்சைகள் தலா 2 வார்டுகளையும் கைப்பற்றி உள்ளன.
அமைதியாக இருந்த அந்த பகுதி மக்களிடையே வெறுப்புணர்வை வளர்க்க நினைத்த பாஜகவுகு அப்பகுதி மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர். அத்துடன் அதன் கூட்டண கட்சியான அதிமுகவிற்கும் ஆப்படித்திருக்கிறார்கள்.