சென்னை: காலை 10.30 மணி நிலவரப்படி மாநகாட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 21 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. சென்னை உள்பட 21 மாநகராட்சிகளுக்கான 1372 வார்டுகளுக்கானவாக்கு எணிண்கை இன்று நடைபெற்று வருகிறது.
காலை 10.30 மணி நிலவரப்படி மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் ஒட்டு மொத்தமாக 202 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 21 இடங்களில் அதிமுகவும், 23 இடங்களில் மற்றவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 12 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி, 1, 8 , 29, 49, 59, 94, 115, 121, 168, 174, 187 ஆகிய வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 59-ஆவது வார்டில் திமுகவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மகேஸ்வரி டெபாசிட் இழந்ததாக கூறப்படுகிறது.
கோவை மாநகராட்சியில் 16 வார்டுகளில் திமுக முன்னிலை பெற்று வருகிறது. கோவை மாநகராட்சியில் இதுவரை அறிவிக்கப்பட்ட 7 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – நேரம்: 10.30
மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, திமுக 115 இடங்களிலும், அதிமுக 40 இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளது.
திமுக – அதிமுக இடையில் முன்னிலை அளவில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதால், பெரும்பாலும் அதிகப்படியான நகராட்சி வார்டுகளை திமுக கைப்பற்றும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முக்கியம்சமாக திமுக – அதிமுக – பாஜக இடையே போட்டி நிலவி வந்தாலும், புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பர்வேஸ் வெற்றிபெற்றது கவனத்தை ஈர்த்துள்ளது.
மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் 98 நகராட்சிகளில் திமுக முன்னிலை விகிக்கிறது.
பேரூராட்சி முன்னிலை நிலவரம்
489 பேரூராட்சியில் மொத்தம் 7,604 வார்டுகள் உள்ளன. இதில், 196 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதில், திமுக கூட்டணி 1237 வார்டுகளிலும், அதிமுக கூட்டணி 319 வார்டுகளிலும், மற்றவை 134 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளன.
தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – நேரம்: 10.30
மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, திமுக 709 இடங்களிலும், அதிமுக 197 இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 489 பேரூராட்சியில் 265 பேரூராட்சிகளில் திமுக முன்னிலை விகிக்கிறது.
திமுக – அதிமுக வாக்குகள் பதிவானதில் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதால், பெரும்பாலும் அதிகப்படியான நகராட்சி, பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.