சென்னை

சென்னையில் நடந்த மாநகராட்சி தேர்தல் வாக்குகள எண்ண 15 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை அன்று தமிழகம் எங்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.   இதில் சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு 5794 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது.    இவ்வாறு பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை அதாவது 22 ஆம் தேதி அன்று எண்ணி அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதையொட்டி சென்னையில் 15 மண்டலங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  அவை மண்டலம் 1, பகுதி 1-14 வரை பதிவான வாக்குகளை திருவொற்றியூர், டி.எச்.சாலை, வெள்ளையன் செட்டியார் மெட்ரிக் பள்ளி, மண்டலம் 2, பகுதி 15-22  வரை, மணலி, நெடுஞ்செழியன் சாலை, சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரி, மண்டலம் 3, பகுதி 23-33 வரை, அம்பத்தூர், ரெட்ஹில்ஸ் சாலை, சூரப்பேட்டை, வேலம்மாள் பொறியியல் கல்லூரி, மண்டலம் 4- பகுதி 34-48 வரை, தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், காமராஜ் சாலை, அரசு பாலி டெக்னிக்  கல்லூரி, மண்டலம் 5

பகுதி  49-63 வரை, பிராட்வே, புரசைவாக்கம், பாரதி பெண்கள் கல்லூரி, மண்டலம் 6, பகுதி 64-78 வரை,  திரு.வி.க.நகர், நம்மாழ்வார் பேட்டை, மண்டலம் 7, பகுதி 79-93 வரை, அம்பத்தூர், முகப்பேர், மண்டலம் 8, 94-108 வரை பச்சையப்பன் கல்லூரி, மண்டலம் 9, பகுதி 109-126 வரை, லயோலா  கல்லூரி, மண்டலம் 10, பகுதி  127-135 வரை விருகம்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லூரி,

மண்டலம்  11, பகுதி 143-155 வரை, மதுரவாயல் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி, மண்டலம் 12,  பகுதி 156-167 வரை, ஆலந்தூர் ஏ.ஜே.எஸ். மேல் நிலைப்பள்ளி, மண்டலம் 13,  பகுதி 168-180 கிண்டி, அண்ணா  பல்கலைக்கழகம், மண்டலம் 14, பகுதி 181-191  வரை பள்ளிக்கரணை ஜெரூசலேம் பொறியியல்  கல்லூரி, மண்டலம் 15, பகுதி 192-200 வரை சோழிங்கநல்லூர், மேடவாக்கம், முகமது சதக் கலை அறிவியல்  கல்லூரிகள் என  200 வார்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணும் வகையில் 15 வாக்கு எண்ணும்  மையம் அமைக்கப்பட்டுள்ளது.

வரும் 22ம் தேதி காலை 8 மணிக்கு  வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.  இதில்  முதற்கட்டமாகத் தபால் வாக்குகள் எண்ணப்படும். பிறகு அதைத் தொடர்ந்து வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள்  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழகம் முழுவதும் இந்த பணியில் 27 ஆயிரம்  ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.