சென்னை: சென்னை – திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் ‘சார்ஜிங்’ மையங்கள் திறக்கப்பட்டு உள்ளதாக பாரத் பெட்ரோலியம் சில்லரை விற்பனை பிரிவு செயல் இயக்குனர் தெரிவித்து உள்ளார். தென்மாநிலங்களில் முதன்முறையாக தமிழநாட்டில்தான் சார்ஜிங் மையங்கள் திறக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மின்சார வாகனங்களை உபயோகப்படுத்த இந்தியா உள்பட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு சலுகைகளும் வழங்கப்பட்டுகிறது. இதன் காரணமாக சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் மின்சார கார்கள், ஸ்கூட்டர்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதை சாலைகளில் பார்க்க முடிகிறது.
பிற வாகன நம்பர் பிளேட்டுகளை விட பச்சை நிறத்திலான எலக்ட்ரிக் வாகன பயன்பாடு தனித்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டில் முக்கியத்துவம் பெறுவது பேட்டரிகள். மற்றும் அந்த பேட்டரிகளை சார்ஜ் செய்யும் இடமும் அவசியம். நமது நாட்டில் பெட்ரோல் பங்குகள் இருக்கும் அளவுக்கு சார்ஜிங் மையங்கள் இல்லாததால், மின்சார வாகன பயன்பாடுகள் மெதுவாகவே அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, சார்ஜிங் மையங்களை அமைக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, தற்போது, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில், சென்னை – திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில், எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜிங் செய்யும் மையங்கள் துவக்கப்பட்டு உள்ளன. தென் மாநிலங்களில் முதல் முறையாக சார்ஜிங் வசதி உடைய நெடுஞ்சாலை இதுவே என்று பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சில்லரை விற்பனை பிரிவு செயல் இயக்குனர் பி.எஸ்.ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசியவர், . பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை பாதிப்பதில்லை என்பதால், அதன் பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் எலக்ட்ரிக் வாகனம் குறித்த விழிப்புணர்வு அதிகம் உள்ளது. இந்த வாகனங்களில், பெட்ரோல், டீசலால் ஏற்படும் செலவை விட 50 சதவீதம்குறைவு.
தமிழகத்தில், சென்னை – திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் மிக அதிக போக்குவரத்து காணப்படுவதால், அந்த சாலையில் பாரத் பெட்ரோலியம், ‘எலக்ட்ரிக் வாகன பாஸ்ட் சார்ஜிங் காரிடார்’ அமைத்துள்ளது. நெடுஞ்சாலையின் மொத்தமுள்ள 900 கி.மீ. துாரத்தில், சாலையின் இருபுறமும் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, மீனம்பாக்கம், மறைமலைநகர், மேல்மருவத்துார், விழுப்புரம் கூட்டேரிப்பட்டு, விக்கிரவாண்டி, உளுந்துார்பேட்டை, திருச்சி சிறுகனுார், சென்னிமங்கலம், மதுரை ஒத்தக்கடை, மேலுார் என, 10 இடங்களில் உள்ள பாரத் பெட்ரோல் பங்க்குகளில் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு மையமும் தலா 100 கி.மீ., துாரத்திலும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சார்ஜிங் மையத்தில் உணவகங்கள் அமைக்கப்பட்டு உள்ளதால், சார்ஜிங் செய்யும் நேரத்தை வாக னஓட்டிகள் பயன் உள்ளதாக மாற்றலாம்.
இதுவே, தென் மாநிலங்களில் முதல் முறையாக எலக்ட்ரிக் வாகனங்ளுக்கு சார்ஜிங் வசதி உடைய நெடுஞ்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.
சார்ஜிங் மையத்தில் வாகனங்களுக்கு, 30 நிமிடங்களில் சார்ஜிங் செய்ய முடியும். தேவையை பொறுத்து எதிர்காலத்தில் கூடுதல் சார்ஜிங் மையங்கள் துவக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே வாகனத்தில் குறைந்தளவில் பேட்டரி உள்ள நிலையில், சார்ஜ் செய்தால் கூடுதலாக 150 கி.மீ., துாரம் செல்லலாம். பாரத் பெட்ரோலியம், இந்த ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுதும் 1,200 சார்ஜிங் மையங்கள் அமைக்க திட்டமிட்டு உள்ளது.
இவ்வாறு பி.எஸ்.ரவி கூறினார்.