சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. அத்துடன், இன்று மாலை 6மணிக்கு மேல் தொலைக்காட்சி, வாணொலி, சமூக ஊடங்களில் பரப்புரைகள் செய்வதற்கும் அனுமதியில்லை என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தமிழகத்தில் 2016ம் ஆண்டுக்கு பிறகு தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது தான் நடைபெறுகிறது. சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த 12,838 வார்டுகளுக்கு பிப்ரவரி மாதம் 19ம் தேதி வாக்கு பதிவு நடைபெறுதுகிறது. இந்த தேர்தலில் சுமார் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி நடைபெற உள்ளது. பின்னர், தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர்களின் பதவியேற்பும், மேயர் பதவிக்கான தேர்தலும் மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மாலை 6 மணிக்கு மேல் தொலைக்காட்சி, வாணொலி, சமூக ஊடங்களில் பரப்புரைகள் செய்வதற்கு அனுமதியில்லை என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு 19.02.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மேற்குறிப்பிட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை தொடர்பாக, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தொலைக்காட்சிகள், வானொலிகள், டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களில் இன்று (17.02.2022) மாலை 6.00 மணி வரை மட்டும் தேர்தல் பரப்புரை மற்றும் விளம்பரங்கள் செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறது.
எனவே, மாலை 6.00 மணிக்கு மேல் தொலைக்காட்சிகள், வானொலிகள், டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களில் தேர்தல் பரப்புரைகள் மற்றும் விளம்பரங்கள் செய்வதற்கு அனுமதியில்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.