டெல்லி: இந்தியாவில் கடந்த இரண்டு மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் ஜனவரியில் 6.01% ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலைவாசி உயர்ந்துள்ளதாகவும், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் 5.66% ஆக இருந்த சில்லறை விலைவாசி உயர்வு விகிதம், தற்போது (2022ஆம் ஆண்டு ஜனவரி இறுதி) 6.01% ஆக அதிகரித்துள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலைத்தொடர்ந்து, கடந்த இரு ஆண்டுகளாக விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கு ஜிஎஸ்டி வரி வசூலும் முக்கிய காரணம். சாதாரண தொழில் களுக்கும், வணிகர்களுக்கும் வரியை மத்தியஅரசு அமல்படுத்தி உள்ளதால், அனைத்து வகையான பொருட்களும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் இருந்த விலைவாசிகள் ஜனவரி இறுதியில், அதாவது 3 மாதத்தில் 0.75 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் 14ந்தேதி மாலை (திங்கட்கிழமை) வெளியிடப்பட்ட (NSO) தரவுகளின்படி, நுகர்வோர் விலை பணவீக்கம் அடிப்படையிலான (CPI) குறியீட்டால் அளவிடப்படும் தற்காலிக சில்லறை பணவீக்கம், 2021 டிசம்பரில் 5.66% இலிருந்து 2022 ஜனவரியில் 6.01% ஆக அதிகரித்தது.
சமீபத்தில் முடிவடைந்த நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஒரு மோசமான நிலைப்பாட்டை கடைப்பிடித்தது குறிப்பிடத்தக்கது. MPC முக்கிய கொள்கை விகிதங்களை மாற்றாமல் வைத்திருந்தது, அது தேவைப்படும் வரை அது ஒரு இணக்கமான நிலைப்பாட்டை பராமரிக்கும் என்று கூறியது.
இதுதொடர்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
2021 டிசம்பரில் 5.66% இலிருந்து 2022 ஜனவரியில் 6.01% ஆக அதிகரித்தது.
2022 ஜனவரி மாதம் கிராமப்புறங்களில் சில்லறை விலைவாசி உயர்வு விகிதம் 6.12% ஆகவும், நகர்ப்புறங்களில் 5.91% ஆகவும் அதிகரித்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு விகிதம் 2021 டிசம்பரில் 4.05% ஆக இருந்த நிலையில், 2022 ஜனவரியில் 5.43% ஆக உயர்ந்துள்ளது.
சமையல் எண்ணெய் மற்றும் கொழுப்பு ரக உணவுகளின் விலைவாசி உயர்வு விகிதம் 2021 ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் 2022 ஜனவரியில் 18.7% அதிகரித்துள்ளது.
ஆடைகள் மற்றும் காலணிகள் விலைவாசி உயர்வு விகிதம் 8.84% ஆகவும்,
எரிபொருட்கள் விலைவாசி உயர்வு விகிதம் 9.32% ஆகவும் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் பீப்பாய் ஒன்றுக்கு 15 டாலர் அதிகரித்து தற்போது 95 டாலரை எட்டியுள்ளது.
இதன் காரணமாக சில்லறை விலைவாசி உயர்வு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.