ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை குறைக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நேட்டோ நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பளிங்கென் இந்தியாவின் ஆலோசனையைக் கேட்டதாக வெள்ளை மாளிகையின் ஊடகத் துறை இணைச் செயலாளர் கரைன் ஜீன் பியர்ரி நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜீன் பியர்ரி

இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளின் குவாட் அமைப்பு சார்பாக ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் உக்ரைன் பிரச்சனைக்கான தீர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறிய அவர் இந்த கூட்டம் எப்போது நடைபெற்றது என்ன ஆலோசிக்கப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை.

தெற்கு ஆசிய மற்றும் இந்து மகா சமுத்திர பிராந்தியத்தில் அதிகாரமிக்க அதேவேளையில் பிராந்திய முன்னேற்றத்திற்காக செலயப்படும் நாடாக இந்தியா விளங்கிவருவதால் இந்தோ-பசிபிக் கடல் பிராந்தியத்தில் வர்த்தக சுதந்திரம் குறித்து அதன் ஆலோசனை பெறப்பட்டது என்று கூறினார்.

உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்ய படைகள் வாபஸ்